தகவல் அறியும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் நல்லாட்சியின் கோட்பாடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலின் போது சமகால நல்லாட்சி அரசாங்கம் பொதுமக்களுக்கு தகவல் அறியும் உரிமையை உறுதி செய்யும் என்று வாக்குறுதி வழங்கியிருந்தது. அந்த உறுதிமொழியை தற்போது அரசாங்கம் நிறைவேற்றியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு பேசும் போதே மங்கள சமரவீர மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இலங்கையில் தகவல் அறியும் சட்டத்தை செயல்முறையில் நடைமுறைப்படுத்தல் என்னும் தலைப்பில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

0 Responses to தகவல் அறியும் சட்டத்தின் மூலம் நல்லாட்சி கோட்பாடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன: மங்கள சமரவீர