Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று ஞாயிற்றுக்கிழமை சீனாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கான மாநாட்டிற்கான வணிகப் பிரதிநிதிகளிடம் சீன அதிபர் ஜீ ஜின்பிங் பேசிய போது உலக நாடுகள்  பாதுகாப்பு வாதத்தைக் கைவிட்டு அதற்கு எதிராக எழுந்து நிற்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் இன்றைய 6 ஆவது அணுகுண்டு பரிசோதனையால் கதிகலங்கி நிற்கும் உலகின் 5 பிரதான பொருளாதார சக்திகளுக்கு மத்தியிலும் தனது சந்தைப் படுத்துதல் தடுப்புச் சுவர்களை சீனா தளர்த்த வேண்டும் என அதிகரித்துள்ள அமெரிக்க ஐரோப்பிய அழுத்தங்களுக்கு மத்தியிலும் சீன அதிபர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய உலகில் பாதுகாப்பு வாதமும் அகமுகப் பார்வையும் அதிகரித்துள்ளதாகவும், திறந்த மனப்பான்மையே செயற்பாட்டு திறனை அதிகரிக்க வல்லது என்றும் குறுகிய பார்வை அதனைப் பாதிக்கக் கூடியது என்ற விதமாக ஜின்பிங் கருத்துத் தெரிவித்துள்ளார். சீனாவின் சியாமென் நகரில் நாளை ஆரம்பமாகவுள்ள 9 ஆவது பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பிரேசில்,  ரஷ்யா, இந்தியா,  சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர்கள் கலந்து கொண்ட பார்வையாளர்களிடம்  ஜின்பிங் பேசிய போது பலமுள்ள விலங்கு பலவீனமானதை வேட்டையாடிக் கொல்வது போன்ற பூச்சிய விளைவைத் தரவல்ல ஒரு காட்டின் விதிமுறைகள் நமது இந்த அமைப்பில் இருக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

அதாவது பொருளாதார உலகமயமாக்கலின் விளைவாக ஏற்படக்கூடிய பிரச்சினைகளை நாம் நிராகரிக்கவோ அவற்றின் மீது குற்றம் சுமத்தவோ  முடியாது என்பதே தனது பார்வை என்றும் இவற்றைப் போக்க சர்வதேச சமூகத்துடன் பிரிக்ஸ் நாடுகள் இணைந்து செயற்படும் என்றும் ஜின்பிங் குறிப்பிட்டார். ஜனவரியில் சுவிட்சர்லாந்தின் டாவோஸில் இடம்பெற்ற உலக பொருளாதார கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட முதல் சீன அதிபரான ஜீ ஜின்பிங் அங்கு தன்னை அமெரிக்க வல்லாதிக்க பாதுகாப்பு வாதியான டிரம்புக்கு எதிரான சுதந்திரமான பொருளாதார வாதியாக நிலைப் படுத்திக் கொண்டதுடன் மிக நீண்ட காலமாக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சீனா முட்டுக் கட்டையாக இருந்து வருகின்றது என்ற குற்றச்சாட்டையும் மறுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் பாதுகாப்பு வாதத்துக்கு எதிராக எழுந்து நிற்க வேண்டும்!: ஜீ ஜின்பிங்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.