தமிழக சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்ததுடன், தகுதி நீக்கம் செய்யப்பட்டு காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிப்பை வெளியிடக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இருந்து மாற்றக் கோரியும், தமிழக சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க கோரியும், ஆளுநரிடம் டிடிவி.தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் மனு கொடுத்தனர். ஆளுநரிடம் மனு அளித்த 19 சட்டமன்ற உறுப்பினர்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பேரவைத் தலைவர் தனபால் சம்மன் பிறப்பித்தார். அதில் எடப்பாடி ஆதரவு நிலையை எடுத்த ஜக்கையன் மட்டும் நேரில் ஆஜராகி, விளக்கம் அளித்தார்.
இதற்கிடையே, சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட கோரி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணையின்போது, பேரவைத் தலைவரின் நோட்டீசுக்கு தடை விதிக்க கோரி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி துரைசாமி முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, செப்டம்பர் 20ஆம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்ததுடன், அதுவரை பெரும்பான்மையை நிரூபிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்.
வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும்போது, பேரவைத் தலைவர் தனபால், திடீரென்று 2 நாட்களுக்கு முன்பு 18 சட்டமன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி எம்.துரைசாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
வெற்றிவேல் உள்ளிட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் உச்ச நீதிமன்ற மூத்த வக்கீல்கள் துஷ்யந்த் தவே, சல்மான் குர்சித், பி.எஸ்.ராமன், பி.ஆர்.ராமன் ஆகியோரும், மு.க.ஸ்டாலின் சார்பில் மூத்த வக்கீல்கள் கபில்சிபல், அமரேந்திர சரண் ஆகியோரும், பேரவைத் தலைவர் சார்பில் மூத்த வக்கீல் அரிமா சுந்தரம், ஆளுநரின் செயலாளர் சார்பில் மூத்த வக்கீல் ராகேஷ் திவேதி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் ஆஜராகினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: சட்டப் பேரவைத் தலைவர் தனபால் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மனுதாரர்கள் தரப்பிலும், பேரவைத் தலைவரின் உத்தரவு சரிதான் என்று அரசுத் தரப்பிலும் வாதிடப்பட்டுள்ளது. வாதத்தின்போது பேரவைத் தலைவர் சார்பில் ஆஜரான வக்கீல் பெரும்பான்மையை நிரூபிக்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்று உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை நீட்டிப்பு செய்வதில் ஆட்சேபனை எதுவும் இல்லை என்று தெரிவித்தார். எனவே, அடுத்த உத்தரவு வரும்வரை சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கக் கூடாது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படக் கூடாது. வழக்கு வரும் 4ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்படுகிறது. அப்போது, இந்த வழக்கில் இறுதி விசாரணை நடைபெறும். இந்த வழக்கில் பேரவைத் தலைவர், கவர்னர் செயலாளர், பேரவைச் செயலாளர், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

0 Responses to காலியாக்கப்பட்ட இடங்களுக்கு தேர்தல் நடத்தத் தடை; நம்பிக்கை வாக்கெடுப்பும் நடத்த முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு!