வடக்கு- கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதற்கு ஒரு போதும் சம்மதிக்க மாட்டோம் என்று புனர்வாழ்வளிப்பு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
கிழக்கு, ஓர் இனத்துக்குச் சொந்தமானது அல்ல. அதேபோன்று வடக்கும் ஓர் இனத்துக்கு சொந்தமானது அல்ல. இந்த விடயத்தில் முஸ்லிம்கள் தெளிவாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சரும் அவருடைய கட்சி சார்ந்த தலைவரும் முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக் கொடுத்து, வடக்கையும்- கிழக்கையும் இணைத்து இந்த மாகாணத்தில் வாழுகின்ற மூவின மக்களையும் இரத்த கறைக்குள் கையளிப்பதற்கு, முயற்சிக்கின்றனர். அதற்கு நாங்கள் இடமளிக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

0 Responses to வடக்கு- கிழக்கினை இணைப்பதற்கு சம்மதிக்க மாட்டோம்: எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா