மதுரை பழங்காநத்தத்தில் நேற்று இரவு நடந்த அறிஞர் அண்ணா பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: “ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நாங்கள் யாரும் அவரை நேரில் பார்க்கவில்லை. எங்களை பார்க்க சசிகலா குடும்பத்தினர் விடவில்லை. ஜெயலலிதாவை பார்த்ததாகவும், அவர் இட்லி சாப்பிட்டதாகவும் அப்போது பொய் சொன்னோம். அதற்காக இப்போது மன்னிப்பு கேட்கிறோம். விசாரணை கமிஷனில், ஜெ.,வை சசிகலா குடும்பத்தினர் ஏன் சந்திக்கவிடவில்லை என்ற மர்மம் தெரியவரும். அ.தி.மு.க.,வை ஒழிக்க தி.மு.க.,வுடன் தினகரன் கூட்டு சேர்ந்துள்ளார்.” என்றுள்ளார்.
0 Responses to ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக சொன்னது பொய்: திண்டுக்கல் சீனிவாசன்