Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மியான்மார் ரோஹிங்யா அகதிகள் 30 பேர், கல்கிசைப் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

ரோஹிங்யா அகதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த கல்கிசை பிரதேசத்தில் உள்ள நிலையத்துக்கு முன்பாக, பௌத்த தேரர்கள் சிலர் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அடுத்தே, பொலிஸார் மேற்கண்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

“சட்டவிரோதி மியான்மார் பயங்கரவாத குழுவை” இவ்விடத்தில் தங்கியிருக்கின்றனர் என்ற கோசமெழுப்பியே, பௌத்த தேரரர்கள் அவ்விடத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். இதனால், அவ்விடத்தில் சற்றுபதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது.

ஐக்கிய நாடுகளின் அகதிகள் தொடர்பான ஆணையாளர் காரியாலயத்தின் பாதுகாப்பின் கீழ், இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று, அந்த நிலையத்துக்கு பொறுப்பானவர் தெரிவித்துள்ளார்.

எனினும், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பௌத்த தேரர்கள், கடுமையான எதிர்ப்பை தெரிவித்து, அவர்களை அங்கிருந்து அகற்றுமாறு கோரிநின்றனர்.

இந்நிலையில், அந்த நிலையத்துக்குள் சென்ற பொலிஸார், பௌத்த தேரர்களின் முன்னிலையிலேயே, அந்நிலையத்தில் இருந்த பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் உள்ளிட்டவர்களை, தமது பொறுப்பின் கீழ் கொண்டுவந்தனர்.

அதன்பின்னர், அவர்கள் அனைவரையும் பொலிஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, கல்கிசை பொலிஸ் நிலையத்துக்குச் சென்றனர்.

இந்த அகதிகள் 30 பேரும், கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதியன்று காங்கேசன்துறை கடலுக்கு அண்மையில் வைத்து, இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்கள், அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு முயற்சித்துள்ளனர் எனினும், தவறுதலாக, இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்துவிட்டனர் என்றும் தெரியவந்தது.

அவ்வாறு நுழைந்த, பெண்கள் எழுவர் மற்றும் பிள்ளைகள் 16 பேர் அடங்களாக 30 பேரையும், இலங்கை கடற்படையினர், பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

கல்கிஸையில், நேற்று (26) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில், கருத்துரைத்த பொலிஸார், “அவ்விடத்தில் ஏற்பட்டிருந்த நிலைமையை கவனத்தில் கொண்டே, மியான்மார் அகதிகளின் பாதுகாப்பை கருதியே, அவர்களை தங்களுடைய பொறுப்பின் கீழ் கொண்டுவந்தோம்” என்றனர்.

இதேவேளை, எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பௌத்த தேரர்கள் அடங்கிய குழுவுக்கு தலைமை வகித்த, அக்மீமன தயாரத்ன தேரர், இந்தக் குழுவை, (மியான்மார் அகதிகளை) உடனடியாக நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றார்.

0 Responses to பௌத்த தேரர்களின் எதிர்ப்பை அடுத்து ரோஹிங்யா அகதிகள் கல்கிசைப் பொலிஸாரின் கட்டுப்பாட்டில்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.