“பாராளுமன்ற உறுப்பினர்கள் சொத்து விபரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று தவறான செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்களிடம் சொத்து விபரங்கள் கோரப்பட வேண்டும்.” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே தமது சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பித்திருப்பதாக அண்மையில் ஊடகமொன்றில் வெளியான செய்தி குறித்து அவர் பாராளுமன்றத்தின் கவனத்துக்கு நேற்று வெள்ளிக்கிழமை கொண்டு வந்தார். அதன்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நேர்மையாக சொத்து விபரங்களை சமர்ப்பிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் ஒட்டுமொத்தமாக சகலருக்கும் சேறுபூசும் வகையில் ஊடகங்கள் செயற்படுகின்றன. அவ்வாறு செயற்படும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் சொத்து விபரங்கள் கோரப்பட வேண்டும். இதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரவி கருணாநாயக்க கேட்டுக்கொண்டார்.
எனினும், ஊடகவியலாளர்களின் சொத்து விபரங்களைக் கோருவதற்கான அதிகாரம் பாராளுமன்றத்துக்குக் கிடையாது என சபாநாயகர் கரு ஜயசூரிய பதிலளித்தார்.
இருந்தபோதும், தனது நிலைப்பாட்டில் விடாப்பிடியாகவிருந்த ரவி கருணாநாயக்க ஊடகவியலாளர்களின் சொத்து விபரங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் கோரினார்.
அவர்களிடம் சொத்துவிபரங்களைக் கோரும் அதிகாரம் பத்திரிகை சபைக்கே உள்ளது. தேவையாயின் ஊடகத்துறை அமைச்சுடன் கலந்துரையாடி இது தொடர்பில் தீர்மானிக்க முடியும் என சபாநாயகர் பதில் வழங்கினார்.

0 Responses to ஊடகவியலாளர்களிடமும் சொத்து விபரங்கள் கோரப்பட வேண்டும்: ரவி கருணாநாயக்க