Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்னும் சில ஆண்டுகளில் உலக சுற்றுலாத்துறையின் மையமாக ஆசியப் பிராந்தியம் விளங்கும், அப்போது அதி பிரதான மையமாக இலங்கை மாறும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

‘இலங்கையின் அபிவிருத்திக்கான சுற்றுலா’ என்ற தொனிப்பொருளிலான சர்வதேச மாநாடு கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இலங்கை, நிலையான பொருளாதார அபிவிருத்தியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. சுற்றுலாத்துறையைப் பொறுத்தவரையில், வேகமாக வளர்ச்சியடைந்துவரும் துறையாக மாறியிருக்கிறது.

எதிர்வரும் ஆண்டுகளில், உலகத்திலேயே அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பிராந்தியமாக ஆசியா மாற்றமடையும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. 2030ஆம் ஆண்டளவில் ஆசிய பிராந்தியத்துக்கு சுமார் 500 பில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். அதில் முக்கிய கேந்திர நிலையமாக இலங்கை விளங்கும் என்பதில் ஐயமில்லை.

இலங்கையில் தென்பகுதியை அபிவிருத்தி செய்ய வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது. சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்பும் இடமாக, தென்பகுதி விளங்குகிறது. அத்துடன், யாழ்ப்பாணம், மன்னார், கிழக்குக் கடற்கரைப் பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது.

கொழும்பு, திருகோணமலை, அம்பாந்தோட்டைத் துறைமுகங்களின் அபிவிருத்திக்காக, நாம் நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையில் பல்வேறு முன்மொழிவுகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். இலங்கையின் சுற்றுலாத்துறையை நிலையான வருமானம் மிக்கதாக மாற்றுவதற்கு, 2025ஆம் ஆண்டில் எமது அடைவுகள் குறித்தும் கலந்துரையாடல்களை நடத்தி வருகிறோம்.” என்றுள்ளார்.

0 Responses to உலக சுற்றுலாத்துறையின் மையமாக இலங்கை மாறும்: ரணில்

Post a Comment

Followers