பயங்கரவாதத்திற்கு சாதி, மதம் கிடையாது என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். புதுடில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் கூறியதாவது, “மதத்தின் பெயரால் இளைய தலைமுறையினர் தவறாக வழி நடத்தப்படுகின்றனர். வாக்குச்சீட்டுக்களே வலிமையானது, தோட்டாக்கள் தற்காலிகமாகவே மாற்றத்தை தரும். நிரந்தர தீர்வை ஏற்படுத்தாது. தோட்டக்களை விட வாக்கு சீட்டுகளே வலிமையானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆயுதப்போரட்டத்திற்கு பின் அரசியலில் ஈடுபட்டு இலக்கை அடைய முயற்சிப்போரை ஆதரிக்க கூடாது.” என்றுள்ளார்.
0 Responses to பயங்கரவாதத்திற்கு சாதி, மதம் கிடையாது: வெங்கையா நாயுடு