Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஊடகவியலாளா் நவரத்தினம் பரமேஸ்வரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான மறைந்த அ.அமிர்தலிங்கத்தின் மகன் பகீரதன் மற்றும் இன்னொரு நபரினாலேயே ஊடகவியலாளர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

இது தொடர்பில் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளா் நவரத்தினம் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளதாவது, “சுமார் 32 வருட ஊடக வரலாற்றில் இலங்கைப் படை அதிகாரிகள் முதல் விடுதலைப் புலிகளது தலைமை வரை கேள்விக்குள்ளாக்கியிருந்த போதும், எனக்கு எந்தவித அச்சுறுத்தலும் இருந்ததில்லை. அதே போன்று தமிழ் ஆயுதக்குழுக்களாலும் இருந்ததில்லை. ஆனால், பகிரங்கமாக தமக்கு வன்முறை தெரியாதென சொல்லிவந்த கூட்டணியினரால் நான் தாக்கப்பட்டமை வேதனையினை ஏற்படுத்தியுள்ளது.” என்றுள்ளார்.

அ.அமிர்தலிங்கத்தின் 90வது நினைவு தின நிகழ்வுகள் யாழ்.பொது நூலகத்தில் நேற்று நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்வின் போது, அமிர்தலிங்கம் தொடர்பிலான துண்டுப்பிரசுரமொன்றை ஊடகவியலாளர் நவரத்தினம் பரமேஸ்வரன் விநியோகித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அமிர்தலிங்கத்தின் மகனாலும், அவரோடு வந்த இன்னொருவராலும் தாக்கப்பட்டுள்ளார்.

0 Responses to ஊடகவியலாளர் பரமேஸ்வரன் மீது அமிர்தலிங்கத்தின் மகன் பகீரதன் தாக்குதல்!

Post a Comment

Followers