Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் இறுதி மோதல்களில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக அப்போதையை இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். ஆகவே, அந்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு சர்வதேச நீதிமன்றத்தின் அவசியம் ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையின் முன்னிலையில் சமர்பித்த யோசனைக்கு அமைய இதுவரை ஏற்றுக்கொள்ளக்கூடிய பதிலை வழங்கவில்லை.

மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பான சர்வதேச நீதிமன்றத்தின் அவசியம் குறித்து தமிழ் பேசும் மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். அத்துடன் போர்க்குற்றம் புரியப்பட்டமை தொடர்பாக தம்மிடம் முக்கிய சாட்சிகள் இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதனை, ஒரு விசேட காரணியாக கொள்ள முடியும்.

ஜகத் ஜயசூரிய உள்ளிட்ட 30 உறுப்பினர்கள் படைத்தரப்பில் போர்க்குற்றம் புரிந்துள்ளதாக சரத் பொன்சேகா கூறியுள்ளார். ஆனால் அதற்கு இரண்டு தினங்களுக்குப் பின்னர் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில், யுத்த வீரர்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப் போவதில்லை என்று தெரிவித்தார். இதுதான் இலங்கை அரசாங்கத்தின் இன்றைய முக்கிய நிலைப்பாடாக உள்ளது. எனினும், இறுதியாக தமிழ் மக்களுக்காக சர்வதேச விசாரணைக்கான நீதிமன்றம் ஒன்று அவசியம்.” என்றுள்ளார்.

0 Responses to இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச நீதிமன்றம் அவசியம்; ஐ.நா.வில் எம்.கே.சிவாஜிலிங்கம்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.