Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பப்புவா நியூகினியா தீவை இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 6 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது. பிரிட்டனுக்குச் சொந்தமான பி எம் ஜி தீவை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. கடலுக்கு அடியில் 5.7 Km ஆழத்தில் 6 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது.

எனினும் இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுவிக்கப் படவில்லை என்பதுடன் இதன் காரணமாக உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாகவோ அல்லது கடும் சேதம் ஏற்பட்டதாகவோ இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக 1998 ஆம் ஆண்டு பப்புவா நியூகினியாவில் கடலுக்கு அடியில் அதிகபட்சமாக 7 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து உண்டான நிலநடுக்கங்களால் 3 முறை சுனாமி தாக்கியதாகவும் இதில் 2100 பேர் வரை பலியானதாகவும் வரலாற்றில் பதிவு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to பப்புவா நியூகினியாவைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...