Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இனவாத அடிப்படையில் சில கட்சிகள் தமது யோசனைகளைப் புறக்கணித்திருப்பது வருத்தமளித்திருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

‘புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள், பாரபட்சம் காட்டக்கூடாது என்ற விடயத்தை நிராகரித்துள்ளன’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை அரசியலமைப்பு சபையாக கூடியது. இதன் போது புதிய அரசியலமைப்பு தொடர்பான வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பின்னர் உரையாற்றும் போதே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “முதற்தடவையாக பிரதமர் ஒருவர் அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளுக்கு தலைமைத்துவம் வகிக்கின்றார். சகல கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இதில் பங்களிப்புச் செலுத்துகின்றனர்.

அது மாத்திரமன்றி பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கும் நாம் போதியளவு அவகாசத்தை வழங்கியுள்ளோம். பல தரப்பட்டவர்களின் கருத்துக்களைக் கொண்டதாக இது அமைந்துள்ளது. மாறுபட்ட கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதில் பாரிய அர்ப்பணிப்பொன்று தேவைப்படுகிறது.

அதேநேரம், தேர்தல் முறைமாற்றம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனியாக சமர்ப்பித்திருந்த யோசனைகள் இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை.” என்றுள்ளார்.

0 Responses to இனவாத அடிப்படையில் சில கட்சிகள் யோசனைகளைப் புறக்கணித்திருப்பது வருத்தமளிக்கிறது: ரவூப் ஹக்கீம்

Post a Comment

Followers