வடக்கு மாகாணத்திலிருந்து உடனடியாக இராணுவத்தை அகற்றும் எந்த தேவையும் தற்போது கிடையாது என இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி இராணுவம் தனது 68வது தினத்தை கொண்டாடவுள்ள நிலையில், நேற்று வியாழக்கிழமை கண்டி தலதா மாளிகையில் பௌத்த மத ஆசீர்வாதங்களில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இராணுவ தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இன்றைய நிலையில் வடக்கில் இராணுவம் இருப்பது சாதாரணமான ஒரு நிலைப்பாடாகும். அதாவது நாட்டையும் மக்களையும் பாதுகாக்கின்ற மிகப் பாரிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர், படைத்தளபதிகள் அடங்கலாக இன்னும் பல்வேறுபட்ட ஆய்வுகளினதும் மற்றும் பல தேவைகளினதும் அடிப்படையிலேயே அங்கு இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆகவே, வடக்கிலிருந்து உடனடியாக இராணுவத்தை அகற்றும் அவசியம் தற்பொழுது கிடையாது. இராணுவத்தினரின் எண்ணிக்கை குறித்து எவரும் எதனையும் கூற முடியாது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கிலும் கிழக்கிலுமாக 180,000 இராணுவத்தினர்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவ்வாறு இல்லை, அதை நாம் மறுக்கின்றோம்.
இராணுவத்தினர்களின் எண்ணிக்கை குறித்து சம்பளம் வழங்கும் திறைசேரிக்கும் இன்னும் சிலருக்குமே தெரியும். வடக்கு மாகாண முதலமைச்சர் கண்டி விஜயம் குறித்து நான் சந்தோசமடைந்தேன், உடன் அவருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தேன்.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கிலிருந்து இராணுவத்தை உடனடியாக அகற்றும் தேவை இப்போது இல்லை: இராணுவத் தளபதி