Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலண்டனில் அமைந்துள்ள டவர் ஹில் என்ற மெட்ரோ சுரங்க ரயில் நிலையத்துக்கு அருகே டியூப் ரயிலில் மர்ம பொருள் ஒன்று வெடித்தில் ஏற்பட்ட பயம் காரணமாக பயணிகள் பதற்றத்துடன் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறி உள்ளனர். இது குறித்து பிரிட்டன் ஊடகங்களில் பின்னர் வெளியான தகவலில் குறித்த சம்பவம் மாபைல் சார்ஜர் ஒன்று அதிகமாக வெப்பமடைந்து வெடித்ததால் தான் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாகப் போலிசார் கருதுவதாக கூறப்பட்டுள்ளது.

பயணிகள் அலறி அடித்துக் கொண்டு அனைத்து வழிகளாலும் வெளியேறியதால் ஒருவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டதாக மட்டுமே தெரிய வருகின்றது. இச்சம்பவத்தை அடுத்து குறித்த ரயில் நிலையத்துக்கு சீல் வைத்த போலிசார் இச்சம்பவம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும் குறித்த ரயில் நிலையத்துக்குப் பயணிகள் உள்நுழைய வேண்டாம் என்ற பதாதைகளை ஏந்தியவாறு ரயில்வே ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதைவிட  குறித்த சம்பவத்தை நேரில் பார்வையிட்டவர்கள் டுவிட்டர் போன்ற சமூக வலைத் தளங்களில் தமது அனுபவத்தைப் பதிவு செய்தும் வருகின்றனர். நண்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தை அடுத்து மதியம் 12:35 மணியளவில் டவர் ஹில் சுரங்க ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப் பட்டுள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில் இலண்டன் டியூப் ரயில் சேவையின் பார்சன்ஸ் கிறீன் சுரங்க ரயில் நிலையத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 22 பேர் காயம் அடைந்திருந்ததுடன் இச்சம்பவத்தில் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை இலண்டன் போலிசார் கைது செய்தும் உள்ளனர். அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள இச்சம்பவங்களை அடுத்து இலண்டன் வாழ் மக்கள் பொதுமக்கள் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துவதற்குச் சற்று அச்சமடைந்துள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

0 Responses to இலண்டன் டியூப் ரயிலில் மர்ம பொருள் வெடிப்பு:பதற்றத்துடன் வெளியேறிய பயணிகள்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...