Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கிலுள்ள இராணுவத்தினர் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் போலித் தரவுகளை முன்வைத்து வருகின்றார் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

சி.வி.விக்னேஸ்வரன், வடக்கில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் தொடர்பில் எந்தகைய கருத்துக்களை தெரிவித்தாலும், தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்பும் முடிவெடுக்கும் அதிகாரமும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பியகம பிரதேசத்தில் வடிகாலமைப்பு சீர்திருத்த திட்டமொன்றை நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ருவான் விஜயவர்த்தன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “முதலமைச்சர் விக்னேஸ்வரன் எவ்வாறான வேண்டுகோள்களை விடுத்தாலும், தேசிய பாதுகாப்போடு தொடர்பான முடிவுகளை ஜனாதிபதியையும் பிரதமரையும் முதன்மையாக கொண்ட அரசாங்கமே எடுக்கும்.

வடக்கில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதனால் வடக்கு மாகாண முதலமைச்சர் பாதுகாப்பு தரப்பினர் தொடர்பில் பிழையான கருத்துக்களை தெரிவித்து வருவது கவலைக்கிடமானது. விக்னேஸ்வரன் வேண்டுவது போன்று வடக்கிலிருந்து இராணுவத்தினரையோ முகாம்களையோ அப்புறப்படுத்த மாட்டோம்.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கிலுள்ள இராணுவத்தினர் தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் போலித் தரவுகளை முன்வைக்கிறார்: ருவான் விஜயவர்த்தன

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.