Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா ஜெயராமை, நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் பார்வையிட்டோம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை நாங்கள் பார்த்தோம் என்று கூறியது பொய் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கடந்த சில தினங்களுக்கு முன் கருத்து தெரிவித்தார்.

திண்டுக்கல் சீனிவாசனின் இந்த கருத்து தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை கிளப்பியது. இதற்கிடையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணைக்கமிஷன் அமைத்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, அப்பல்லோவில் ஜெயலலிதாவை பார்த்ததாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து குறித்து செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயல்லிதாவை நான் உட்பட அனைத்து அமைச்சர்களும் பார்த்தோம்” என தெரிவித்துள்ளார். அமைச்சர்களின் முரண்பட்ட கருத்துக்கள் அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாது தமிழக மக்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

0 Responses to மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை அமைச்சர்கள் பார்வையிட்டோம்: செல்லூர் ராஜூ

Post a Comment

Followers