Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதிய அரசியலமைப்பிற்கான வழிநடத்தல் குழுவின் அறிக்கையில் மக்களின் கருத்துக்கள் உள்ளடக்கப்படவில்லை என்று கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். அத்தோடு, பௌத்தத்திற்கான முதலிடத்தினை எந்தவொரு தருணத்திலும் நீக்குவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை அரசியலமைப்பு சபையாக கூடியது. இதன் போது புதிய அரசியலமைப்பு தொடர்பான வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பின்னர் உரையாற்றும் போதே தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இடைக்கால அறிக்கையில் சகல கட்சிகளினதும் கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. பிரதமர் முன்வைத்த விடயங்களுக்கிடையில் முரணான ஏற்கமுடியாத விடயங்களும் இருக்கின்றன. இந்த அறிக்கையில் சகல மக்களினதும் கருத்துக்கள் உள்வாங்கப்பட வேண்டும். மக்கள் என்பது அரச சார்பற்ற நிறுவனங்களல்ல.

இங்கு நாம் 14 அம்சங்களை முன்வைத்திருந்தோம். ஒற்றையாட்சி என்பது தொடர வேண்டும். ஆனால் இதனை ஆங்கிலத்தில் ஒருவாறும் தமிழில் வேறு விதமாகவும் அர்த்தம் கற்பித்திருப்பது கபடநாடகமாகும். ஒற்றையாட்சியில் மக்களின் ஜனநாயக உரிமைகள் பலப்படுத்த வேண்டும். உப குழுக்களில் எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. சர்வாதிகாரமாக யாப்பு உருவாக்க முடியாது. பௌத்த மதத்திற்கு முதலிடம் என்பதை நீக்க இடமளிக்க மாட்டோம்” என்றுள்ளார்.

0 Responses to மக்களின் கருத்துக்கள் இடைக்கால அறிக்கையில் இல்லை; பௌத்தத்துக்கு முதலிடம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்: தினேஷ் குணவர்த்தன

Post a Comment

Followers