“இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்துக்குள் அரசியல்வாதிகள் நுழைந்து குழப்பம் விளைவிப்பதால், வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமைப் பதவியிலிருந்து திலங்க சுமதிபால உடனடியான இராஜினாமாச் செய்ய வேண்டும்.” என்று கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கைக் கிரிக்கெட் அணியின் தொடர் தோல்விகளுக்கு இலங்கைக் கிரிக்கெட் நிறுவனமே பொறுப்பாகும். வீரர்களின் மனத் தைரியத்தை உடைக்கும் வகையில் செயற்படுகின்றனர்.
அண்மையில், இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்கவுக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கும் இடையில் இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளது. ஆகவே, இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் குளறுபடிகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் உடனடியாக விவாதம் நடத்தப்பட வேண்டும்.
வீரர்கள் மாத்திரமல்ல, தெரிவுக்குழு உறுப்பினர்களும் அரசியல்வாதிகளினால் பாதிக்கப்பட்டு, தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.” என்றுள்ளார்.

0 Responses to இலங்கைக் கிரிக்கெட்டுக்குள் அரசியல் நுழைந்துள்ளதால் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஷெஹான் சேமசிங்க