Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மியான்மர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அரசியல் ஆலோசகர் ஆங்சாங் சூகியை சந்தித்து பேசினார். மியான்மரில் உள்ள நேபிதாவ் நகரில் இந்த சந்திப்பு இன்று புதன்கிழமை நடைபெற்றது.

இருநாடுகளின் உறவை மேற்படுத்துவது தொடர்பாக மோடி அந்நாட்டு அதிபர் ஹதின் கியாவ் ஆலோசகர் ஹங்சான் சூச்சி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

வர்த்தகம், பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு, உள்கட்டமைப்பு, எரிசக்தி, நிதி முதலீடு ஆகியவை முக்கிய அம்சமாக இடம் பெற்றதாக தெரிகிறது.

குறிப்பாக இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்கா முஸ்லீம்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மியான்மரில் ராகிணி மாகாணத்தில் ரோஹிங்கா போராளிகளுக்கும், அந்நாட்டு அரசு படைக்கும் இடையே நடந்து வரும் மோதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

இதனால் ரோஹிங்கா முஸ்லீம்கள் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் சட்டவிரோதமாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கா முஸ்லீம்கள் தங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ரோஹிங்கா முஸ்லீம்கள் தொடர்பில் ஆங்சாங் சூகியோடு மோடி பேச்சு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.