புதிய அரசியலமைப்பு சட்டத்தில் ‘சமஷ்டி’ என்ற வார்த்தைக்கே இடமில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு பேரவையில் முன்வைக்கப்பட்டிருக்கும் புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில், பௌத்த சமயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாது என்றும், நாட்டைப் பிளவுபடுத்தும் வகையிலான விதந்துரைகள் இடம்பெற்றிருப்பதாகவும் சில பௌத்த தேரர்கள் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அவ்வாறான நிலை ஏதும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“72ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பௌத்த சமயத்துக்கான முன்னுரிமைத் தன்மையில் எவ்வித மாற்றமும் கொண்டுவரப்படாது. புதிய சட்டமூலத்தில் பௌத்த சமயத்தைத் தாழ்வுபடுத்தும் வகையில் எந்தவித அம்சங்களும் இடம்பெறவில்லை என்பதை, புதிய அரசியலமைப்பினை இயற்றும் குழுவினரிடம் ஒரு முறைக்கு இரண்டு முறைகள் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொண்டுவிட்டேன். எனவே, தேரர்கள் பயப்படும்படியான எதுவித மாற்றமும் புதிய அரசியலமைப்பில் கொண்டுவரப்பட மாட்டாது. அதேபோல், ஒரே இலங்கை என்ற பண்பிலும் எவ்விதமான மாற்றமும் கொண்டுவரப்படாது. எக்காரணம் கொண்டும் இலங்கையைத் துண்டாடும் எண்ணம் அரசிடம் இல்லை.” என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

0 Responses to புதிய அரசியலமைப்பில் ‘சமஷ்டி’ என்ற வார்த்தைக்கே இடமில்லை: மைத்திரிபால சிறிசேன