Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுற்றாடல் பாதுகாப்பு, சுற்றாடல் மதிப்பீடு மற்றும் சுற்றாடல் பெறுமானங்கள் தொடர்பில் அனைவரும் தமது பொறுப்புக்களையும் உரியவாறு நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் ‘இயற்கை இல்லம்’ எனும் பெயரிலான கட்டிட தொகுதியை நேற்று வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றாடல் சட்ட விதிகளை அமுல்படுத்த வேண்டும். அதற்கு அதிகாரத்திலுள்ள மற்றும் அதிகாரத்தில் இல்லாத அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் அரசியல் பேதங்களின்றி ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்பதுடன், எதிர்கால நலன்களுக்காக இன்றைய பணிகளை முறையாக ஆற்ற வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to சுற்றாடல் பாதுகாப்புத் தொடர்பில் அனைவரும் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...