‘புதிய அரசியலமைப்பில் அதியுச்ச அதிகாரப் பகிர்வுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டமை எமக்குக் கிடைத்த இறைவனின் கொடை. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கிடைக்காத ஒன்றை தென்னிலங்கையிடம் கேட்டுக் கொண்டிருக்கின்றார்’ என்று மன்னார் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் யோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நான் அரசியல்வாதியல்ல. நாட்டிலுள்ள அனைத்து மக்களும் அமைதியுடனும் மகிழ்சியுடனும் வாழ வேண்டும் என்று நினைக்கின்ற ஒருவன். இதுவரை காலமும் தனிநாடு கோரி போராடி வந்தாலும், நாம் அதனைத் தற்போது கேட்க முடியாது. நாங்கள் அதனைக் கேட்டாலும் யாரும் தரப்போவதும் இல்லை. இந்த நிலையில், தற்போது கிடைத்துள்ள அதியுச்ச அதிகாரப்பகிர்வினை நாம் இறைவனின் கொடையாகப் பார்க்க வேண்டும். அதிகாரங்களை தற்போது வழங்கிவிட்டு பின்னர், மீளப்பெற முடியாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வடக்கு மாகாண முதலமைச்சரோ கிடைக்காத ஒன்றைக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.” என்றுள்ளார்.

0 Responses to விக்னேஸ்வரன் கிடைக்காத ஒன்றைக் கேட்கிறார்: கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை