Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பயிர் செய்யப்படாத அனைத்து காணிகளையும் பயிர் செய்வோருக்காக வழங்குவதற்கு தற்போதுள்ள சட்டதிட்டங்களின் கீழ் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வறட்சியினால் அழிவுக்குள்ளான பயிர் நிலங்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவந்து உணவு உற்பத்தியை மேம்படுத்துவதற்கு அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

திம்புலாகலை புதிய பிரதேச சபை கட்டிடத்தை நேற்று சனிக்கிழமை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இந்த விடயங்களைக் கூறியுள்ளார்.

இந்த பயிர்ச்செய்கை நிகழ்ச்சித் திட்டத்திற்கு அரசாங்கத்தின் அனைத்து காணிகளும் பயன்படுத்தப்படவுள்ளதுடன், பயிர்ச்செய்கைக்கு உட்படுத்படாமலுள்ள அனைத்து தனியார் காணிகளிலிலும் கட்டாயமாக பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சட்டமியற்றப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களை வறுமையிலிருந்து விடுவித்து நாட்டின் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்தி, நாளைய தலைமுறைக்கு சுபீட்சமான ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே இந்த அனைத்து தீர்மானங்களும் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to பயிர் செய்யப்படாத காணிகளை பயிர் செய்வோருக்கு பகிர்ந்தளிக்க அரசு முடிவு; விரைவில் வர்த்தமானி!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.