Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா மற்றும் தற்போதையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோருக்கிடையில் ஏற்பட்டுள்ள மோதல் நிலையால், பா.ஜ.க. கவலையடைந்துள்ளது.

யஷ்வந்த் சின்கா, 1990களில் அப்போதைய பிரதமர்கள் சந்திரசேகர் மற்றும் வாஜ்பாய் ஆகியோரது தலைமையிலான அமைச்சரவையில், நிதியமைச்சராக பதவி வகித்தவர். பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான யஷ்வந்த் சின்கா, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் ‘நான் இப்போது பேச வேண்டும்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில், நாட்டின் பொருளாதார நிலையில் நிலவும் குளறுபடிகளை மேற்கோள்காட்டி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை கடுமையாக விமர்சித்தார். இதனை நான் இப்போது பேசவில்லை என்றால், தேசிய கடமையில் இருந்து தவறிவிட்டதாக அர்த்தமாகி விடும் என்றும் குறிப்பிட்டார். மத்திய அரசின் மீதான அவரது விமர்சனம் பா.ஜ.க.வில் புயலை கிளப்பி இருக்கிறது.

அவருடைய விமர்சனத்தை வரவேற்று உள்ள காங்கிரஸ் மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசின் மீது கேள்வி கணைகளை தொடுத்து வருகிறது. இப்போது பொருளாதாரம் தொடர்பாக ‘யஷ்வந்த் சின்ஹாவின் குற்றச்சாட்டு தவறு என்றால், நிரூபித்து காட்டுங்கள்’ மத்திய அரசுக்கு பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா சவால் விடுத்து உள்ளது.

யஷ்வந்த் சின்ஹாவின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லி நேற்று பதில் அளித்தார். அவர் கூறியதாவது, “யஷ்வந்த் சின்ஹாவுக்கு முன்னாள் மத்திய நிதியமைச்சராக இருப்பது சவுகரியமாக இல்லை போலும். இப்படி குற்றச்சாட்டு சொல்வதன் மூலம், அவர் 80 வயதில் வேலை கேட்டு விண்ணப்பிக்கிறார். அவர் நிதியமைச்சராக இருந்தபோது 15 சதவீத வாராக்கடன் இருந்தது உள்ளிட்ட ‘சாதனைகளை’ மறந்து விட்டார். கொள்கைகளை விட்டுவிட்டு மனிதர்களை விமர்சிக்க தொடங்கி விட்டார். யஷ்வந்த் சின்ஹா, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துடன் கைகோர்த்து செயல்படுகிறார். ஒருவரை ஒருவர் கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டதை இருவருமே மறந்து விட்டார்கள்.” என்றுள்ளார்.

‘80 வயதில் வேலைக்கு விண்ணப்பிக்கிறார்’ என்ற அருண் ஜெட்லியின் பேச்சுக்கு யஷ்வந்த் சின்ஹா பதிலடி கொடுக்கையில், “நான் வேலை கேட்டு விண்ணப்பமிட்டிருந்தால், அவர் (அருண் ஜெட்லி) அங்கு முதல் இடத்தில் அமர்ந்து இருக்க முடியாது,” என்று கூறியுள்ளார்.

0 Responses to யஷ்வந்த் சின்ஹா- அருண் ஜெட்லி மோதல்; பா.ஜ.க. கவலை!

Post a Comment

Followers