Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் கூட்டியதாகக் கூறப்படும் பொதுக்குழுக் கூட்டம் செல்லது என்று தெரிவித்து டி.டி.வி.தினகரன் ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.

தமிழக அரசியல் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மை இழந்துவிட்டதாகவும், பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறும் எதிர்க்கட்சியான தி.மு.க. ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளது.

அதேபோல், சென்னை உயர் நீதிமன்றத்திலும் தி.மு.க. சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. டி.டி.வி.தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வருக்கு அளித்துள்ள ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், ஆளுநர் முடிவுக்காக காத்திருக்க போவதாக டி.டி.வி.தினகரன் கூறியிருந்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள டி.டி.வி.தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் குஷால் நகரில் உள்ள பெண்டிங் பான் எனும் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டினர். பொதுக்குழுவில் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கபட்ட வி.கே.சசிகலா நியமனம் ரத்து செய்யபட்டது. இந்த நிலையிலேயே, குறித்த பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.

புதுடெல்லியில் இன்று தினகரன் ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் விஜிலா சத்தியானந்த், செங்குட்டுவன், வசந்தி முருகேசன் உள்பட 5 பேர் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தனர். முதலமைச்சர் பழனிசாமி, பன்னீர்செல்வம் அணியின் பொதுக்குழு தீர்மானத்தை ஏற்க கூடாது என வலியுறுத்தி உள்ளனர்.

0 Responses to அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது; டி.டி.வி.தினகரன் ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஆணையத்தில் புகார்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.