Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருதுக்களாகும். அவை, அரசாங்கத்தின் கருத்துக்கள் அல்ல.” என்று சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஜகத் ஜயசூரிய தொடர்பான விவகாரம் அரசாங்கம் சார்ந்த விடயமல்ல. எவருக்கு எதிராகவும் வெளிநாடுகளில் வழக்கு தொடர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

23/2 நிலையியற் கட்டளையின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் தினேஷ் குணவர்த்தன கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த கேள்விக்கு விரைவில் அரசாங்கம் பதிலளிக்கும் என்று குறிப்பிட்ட சபை முதல்வர், “அமைச்சர் சரத் பொன்சேகாவின் கருத்து அவர் முன்னாள் இராணுவத் தளபதி என்ற வகையில் கூறப்பட்டதாகும். அது அரசாங்கத்தின் நிலைப்பாடல்ல. எவருக்கு எதிராகவும் வெளிநாடுகளில் வழக்கு தொடர முடியும். எனக்கு எதிராகவும் வழக்கு தொடர முடியும். சரத் பொன்சேகாவை கடந்த அரசாங்கம் சிறையிலடைத்தது. இது குறித்து வெட்கப்பட வேண்டும். நல்லாட்சி அரசாங்கம் இராணுவத் தளபதிகளை சிறையிலடைக்காது. இந்த கேள்விக்கு இரு வாரங்களில் பதில் வழங்கப்படும்.” என்றுள்ளார்.

0 Responses to பொன்சேகாவின் கருத்து அரசின் கருத்தல்ல: லக்ஷ்மன் கிரியெல்ல

Post a Comment

Followers