இலங்கையில் அரசியல் தஞ்சம் மற்றும் புகலிடம் கோரி வருகைத்தந்த 1,333 பேர் தங்கியிருப்பதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
‘அவர்கள் அனைவரும் ஐக்கிய நாடுகள் ஆணையகத்தின் பொறுப்பின் கீழ் உள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதம் இறுதி வரையிலும் புகலிடம் கோரியோரின் எண்ணிக்கையே இதுவாகும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே மஹிந்த சமரசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கையில் தங்கியுள்ளவர்களில் 728 பேர் அகதிகளாக உள்ளனர். மேலும் 605 பேர், அரசியல் தஞ்சம் கோரி உள்ளனர்.
அரசியல் தஞ்சம் கோருவோர் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையகம் ஆராய்ந்து வருவதுடன், அவர்களுக்கு அரசியல் தஞ்சம் தேவையென கருதினால் பொருத்தமான நாட்டுக்கு அவர்களை அனுப்பிவைக்கவும் அல்லது அவர்களை தாய் நாட்டுக்கே மீள அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இலங்கையில் தஞ்சம் புகுந்துள்ளவர்கள் பாகிஸ்தானிலிருந்து வருகைதந்த 1,037 பேர் உள்ளனர். அதேவேளை, ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 190 பேரும், ஈரானைச் சேர்ந்த 18 பேரும், மாலைத்தீவைச் சேர்ந்த 11 பேரும் உள்ளனர்.
அதுமட்டுமன்றி, மியன்மாரிலிருந்து வருகைத்தந்த 36 பேரும், பாலஸ்தீனைச் சேர்ந்த 10 பேரும், சோமாலியாவைச் சேர்ந்த 14 பேரும், சிரியாவிலிருந்து வருகைத்தந்த ஒருவரும், டியுனிசியாவிலிருந்து வருகைத்தந்த ஒருவரும், யேமனிலிருந்து வருகைத்தந்த 13 பேரும், மற்றும் நைஜீரியாவிலிருந்து வருகைத்தந்த இருவரும் உள்ளனர்.” என்றுள்ளார்.

0 Responses to இலங்கையில் 1,333 புகலிடக் கோரிக்கையாளர்கள்: மஹிந்த