சிரிய உள்நாட்டுப் போரில் அதிகபட்சமாக இவ்வருடம் 2017 இல் இதுவரை 3000 பேர் கொல்லப் பட்டுள்ளதாகவும் அதிலும் கடந்த மாதம் செப்டம்பரில் மாத்திரம் 955 பொது மக்கள் கொல்லப் பட்டுள்ளதாகவும் சிரியாவில் இயங்கி வரும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
2011 இல் ஆரம்பமான சிரிய உள்நாட்டுப் போரில் இதுவரை நூறாயிரக் கணக்கான மக்கள் கொல்லப் பட்டும் மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தும் உள்ளனர். தற்போது இந்த உள்நாட்டுப் போரில் இருபெரும் சக்திகளில் ரஷ்யா சிரிய அரசுக்கு சார்பாகவும் அமெரிக்க கூட்டணிப் படைகள் அங்கு இயங்கி வரும் ISIS போராளிகளுக்கு எதிராகவும் களத்தில் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் கொல்லப் பட்ட 955 பொது மக்களில் 207 பேர் சிறுவர்கள் என்றும் பிரிட்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
கொல்லப் பட்டுள்ள மக்களில் 70% வீதத்துக்கும் அதிகமானவர்கள் ISIS இற்கு எதிரான ரஷ்ய விமானத் தாக்குதல் மற்றும் சர்வதேச கூட்டணி நாடுகளின் அனைத்து விதத் தாக்குதல்களுக்கும் இலக்கான பொது மக்களே எனவும் குறித்த மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தலைவர் ராமி அப்டெல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக ரஷ்ய வான் படையின் உதவியுடன் சிரிய் அரச படைகள் ISIS கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு மாகாணமான டெயிர் எஷ்ஷொர் இனைக் கைப்பற்ற போராடி வருகின்றது
மறுபுறம் அமெரிக்க தலைமையிலான சர்வதேசக் கூட்டணி நாடுகளோ தமது வான் தாக்குதல்கள் மூலம் வடக்குப் பகுதியான ரக்கா நகரம் மற்றும் டெயிர் எஷ்ஷொர் இனை ஜிஹாதிஸ்ட்டுக்களிடம் இருந்து கைப்பற்ற குர்து அரபு கூட்டணிப் படைக்கும், சிரிய ஜனநாயகப் படைகளுக்கும் உதவி வருகின்றன. இந்நிலையில் செப்டம்பரில் இந்தளவு உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதுக்குக் காரணம் மிகவும் தீவிரப் படுத்தப் பட்டுள்ள வான் தாக்குதல்கள் தான் என அப்டெல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இன்றைய கணிப்பீட்டின் படி 2011 தொடக்கம் சிரிய குழப்ப நிலையால் 330 000 இற்கும் அதிகமான மக்கள் கொல்லப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. மேலும் இன்று காலை சிரிய மத்திய மாகாணமான ஹோம்ஸில் உள்ள அல் கர்யாடாயின் என்ற சமய முக்கியத்துவம் மிக்க நகரை ISIS மீளக் கைப்பற்றியுள்ளதாகவும் அரச படைகள் இந்த நகரை சுற்றி வளைத்துள்ளதாகவும் உள்ளே பல கிறித்தவக் குடும்பங்கள் சிக்கியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

0 Responses to சிரியாவில் மிகவும் அதிகபட்சமாக 955 உயிர்களைப் பலி வாங்கிய மாதமாக செப்டம்பர்