டாஸ்மாக் மதுபான விலை உயர்வுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து, மதுபான விலை உயர்வு இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வருகிறது.
மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பின்படி 1,000 கடைகள் மூடப்பட்டன. மேலும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த கடைகளும் மூடப்பட்டன. இதனால் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அதிகப்படியான வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து, நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுபானக் கடைகளை வேறு இடங்களில் அரசு திறந்து வருகிறது. இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, ஜிஎஸ்டி வரிவிதிப்பால் தங்களுக்கு வழங்கப்படும் தொகையை அதிகரிக்க வேண்டும் என்று மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. மேலும் மூடப்பட்ட கடைகளால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகையில் மதுபான விலையை உயர்த்த தமிழக அரசுக்கு டாஸ்மாக் நிர்வாகம் பரிந்துரை செய்தது. இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் நடந்த விவாதத்தில் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதனையடுத்து, 180 மில்லி அளவு கொண்ட குவாட்டர், ரம், விஸ்கி, பிராந்தி, வோட்கா போன்ற மது வகைகளின் விலை ரூ.12 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால பீர் விலையில் மாற்றம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. டாஸ்மாக் வருவாயை அதிகரிக்கும் வகையில் மதுபானங்களின் விலையை உயர்த்த தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
தீபாவளி பாண்டிகை நெருங்கும் நேரத்தில் விற்பனையை கருத்தில் கொண்டு விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விலை உயர்வின் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.5,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. 2014ஆம் ஆண்டு டாஸ்மாக் மதுபானங்களின் விலை குவாட்டருக்கு ரூ.8 உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் தற்போதுதான் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to டாஸ்மாக் மதுபான விலை உயர்வு; இன்று முதல் அமுல்!