டெங்கு நோயைக் காட்டிலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி கொடியது என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். மக்கள் மீது அக்கறையில்லாத இந்த அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டி.டி.வி.தினகரன் இன்று திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார். அதன்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பெங்களூரு சிறையில் இருக்கும் வி.கே.சசிகலாவிற்கு பரோல் கேட்டுள்ளோம். அவருக்கு 15 நாட்கள் பரோல் கேட்டுள்ளது. நாளை அவருக்கு பரோல் கிடைக்கும் என்று நம்புகின்றோம்.
நாங்கள் தான் தாய் கழகம். நாங்கள் யாருடனும் சேர வேண்டியதில்லை. அவர்கள் தான் எங்களுடன் வந்து சேர வேண்டும். முதல்வர் பதவிக்கு வர எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென யோகம் அடித்தது. அதனால் தான் அவர் முதல்வராகியுள்ளார். எவ்வளவு தூரம் செல்கிறார்களோ செல்லட்டும். எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்து பார்க்கட்டும். வீரத்தமிழனாக இருந்தால் முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்யட்டும்.
எடப்பாடி தலைமையிலான அரசுக்கு அறுதி பெரும்பான்மை இல்லை என்பது உலகத்திற்கே தெரியும். டெங்குவால் பலர் இறப்பதை பற்றி ஆட்சியாளர்களுக்கு துளியும் கவலையில்லை. டெங்குவை விட கொடியது எடப்பாடி பழனிசாமி அரசு. மக்கள் மீது அக்கறையில்லாத இந்த அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம்.” என்றுள்ளார்.

0 Responses to டெங்குவை விடக் கொடியது எடப்பாடி பழனிசாமி ஆட்சி: டி.டி.வி.தினகரன்