Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுக் கூட்டங்களின் போது வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்புப் பற்றியோ, சமஷ்டிக் கோரிக்கை பற்றியோ, மதசார்பற்ற நாடு பற்றியோ அமைச்சர் மனோ கணேசன் என்றைக்கும் பேசியது கிடையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில், இரா.சம்பந்தன், நான், மனோ கணேசன், டி.எம்.சுவாமிநாதன், டக்ளஸ் தேவானந்தா ஆகிய ஐந்து தமிழர்கள் அங்கம் வகித்திருந்தோம். அதில், சுவாமிநாதனும், டக்ளஸ் தேவானந்தாவும் ஒருநாளும் ஒரு விடயத்தையேனும் பேசியதில்லை. மனோ கணேசனும், வடக்கு- கிழக்கு இணைப்பு, சமஷ்டி மற்றும் மதசார்பற்ற நாடு என்கிற விடயங்கள் பற்றி என்றைக்கும் பேசியதில்லை. சம்பந்தனும் நானுமே அவை பற்றி பேசியிருக்கின்றோம். வழிநடத்தல் குழுக் கூட்டங்களின் ஒளிப்பதிவுகள் இருக்கின்றன. அவை வெளிவரும் போது, இது எல்லோருக்கும் தெரிய வரும்.” என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடைக்கால அறிக்கை மற்றும் வழிநடத்தல் குழுக் கூட்டங்களில் உரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் உண்மையை மக்களிடம் கூற வேண்டும் என்று மனோ கணேசன் தெரிவித்திருந்தார். இந்த விடயம் தொடர்பிலான கேள்விக்கு பதிலளிக்கும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

0 Responses to வடக்கு - கிழக்கு இணைப்புப் பற்றி வழிநடத்தல் குழுவில் மனோ கணேசன் பேசியதே இல்லை: எம்.ஏ.சுமந்திரன்

Post a Comment

Followers