Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையர்கள் அனைவரும் திங்கட்கிழமைகளில் மாமிசம் உண்பதை தடை செய்ய வேண்டும் என்று பௌத்த அமைப்புக்கள் உள்ளிட்ட நான்கு அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அத்தோடு, வெசாக் வரும் மே மாதத்தில் விலங்குணவுகள் உண்பதை, சகல பௌத்தர்களும் தவிர்க்க வேண்டும் என்றும் அந்த அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

அநகாரிக தர்மபால மனிதாபிமான நிறுவனம், விலங்குகளுக்கான தர்மத்தின் குரல், போதிராஜா நிறுவனம், இளைஞர் அகிம்சை இயக்கம் ஆகிய நான்கு அமைப்புக்களே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளன.

குறித்த அமைப்புக்கள் நேற்று வியாழக்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தின.

அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையர்கள் அனைவரும் திங்கட்கிழமைகளில் மாமிசம் புசிப்பதை நிறுத்த வேண்டும். மே மாதம் முழுவதும் சகல பௌத்தர்களும் தாவர போசணிகளாக வேண்டும். இது, இலங்கையை மாமிசம் இல்லாத நாடாக மாற்றுவதற்கான முதற்படி ஆகும்.

2013ஆம் ஆண்டில், 200,000 மாடுகள், இறைச்சிக்காகக் கொல்லப்பட்டன. இது, 2016ஆம் ஆண்டில் 170,000ஆகக் குறைந்தது. மட்டக்களப்பிலும் அம்பாறையிலும், மாடறுப்பு அதிகமாக உள்ளது.

மாடு வெட்டுதலைத் தடை செய்யக் கோரிய 2,600 புத்த ஜயந்தியின்போது, அண்ணளவாக ஒரு மில்லியன் மக்கள் கையொப்பமிட்ட மனு செயற்படுத்தப்படவில்லை. புத்த ஜயந்தியின்போது, பொதுமக்களுக்கு நாம் காட்டி வீடியோக் காட்சிகளைப் பார்த்த கத்தோலிக்க, முஸ்லிம் குருமார்களும் எம்மோடு சேர்ந்து அந்த மனுவில் கையொப்பமிட்டார்கள்.” என்றுள்ளன.

0 Responses to இலங்கையர்கள் திங்கட்கிழமைகளில் மாமிசம் உண்பதை தடை செய்ய வேண்டும்: பௌத்த அமைப்புக்கள் கோரிக்கை!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.