ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினுடைய கொவர்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் இரேஷா டி சில்வா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நிதி மோசடி விவகாரம் தொடர்பில், இன்று செவ்வாய்க்கிழமை காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டார்.
பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்தநிலையில், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரேஷா டி சில்வாவை பிணையில் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரேஷா டி சில்வா, நாமல் ராஜபக்ஷவின் செயலாளராகவும் செயற்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to நாமல் ராஜபக்ஷவின் முன்னாள் செயலாளருக்கு பிணை!