Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நடராஜனைப் பார்க்க 15 நாள் பரோல் கேட்ட, வி.கே.சசிகலாவின் கோரிக்கையை பெங்களூர் சிறைத்துறை நிராகரித்து உத்தரவிட்டது.
இதனால் கூடுதல் ஆவணங்களுடன் புதிய மனுவை இன்று புதன்கிழமை டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தாக்கல் செய்கின்றனர்.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் நடராஜன் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடராஜனை பார்க்கவும், உடனிருந்து கவனித்துக்கொள்ளவும் பரோலில் விடுதலை செய்யக்கோரி சிறைத்துறை அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க சசிகலா முடிவு செய்தார்.

அதன்படி நேற்று செவ்வாய்க்கிழமை டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தலைமையில் வக்கீல்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் சோமசேகரை சந்தித்து சசிகலா சார்பில் அக்டோபர் 5ஆம் தேதி முதல் 15 நாட்கள் பரோலில் செல்ல அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.

இந்த மனுவை பரிசீலனை செய்த சிறை கண்காணிப்பாளர் சோமசேகர் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பரோலில் விடுதலை செய்யக்கோரி கொடுத்த மனுவில் இணைக்கப்பட்ட ஆவணங்கள் போதுமானதாக இல்லை என்ற காரணத்தை சிறை கண்காணிப்பாளர் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கூடுதல் ஆவணங்களுடன் புதிய மனு தாக்கல் செய்தால், அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறைத்துறை வட்டாரங்களில் தெரிவித்துள்ளனர். இதனால், கூடுதல் ஆவணங்களுடன் இன்று புதிய மனுவை தினகரன் ஆதரவாளர்கள் தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 Responses to சசிகலாவின் பரோல் கோரிக்கை நிராகரிப்பு!

Post a Comment

Followers