Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தின் 25வது ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் சற்றுமுன்னர் (இன்று வெள்ளிக்கிழமை) பதவியேற்றுக் கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் காலை 09.30 மணியளவில் நடந்த விழாவில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த பதவியேற்பு விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், எ.வ.வேலு, பொன்முடி, அன்பழகன், ஆர்.எஸ்.பாரதி, மா.சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், வானதி சீனிவாசன், தலைமை செயலர், டிஜிபி, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்க நாட்டு தூதரக அதிகாரிகள், விழாவில் கலந்து கொண்டனர்.

ஆளுநர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு முன்வரிசையில் இடம் அளிக்கப்பட்டிருந்தது. ஆளுநராக பதவியேற்ற புரோஹித்திற்கு தலைமை நீதிபதி, முதல்வர், தலைமை செயலர், அமைச்சர்கள், அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

0 Responses to தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றார்!

Post a Comment

Followers