Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவும், கட்சியின் ஆட்சி மன்ற குழுவும் விரும்பினால் மீண்டும் ஆர்.கே.நகரில் போட்டியிட தயாராக உள்ளேன்” என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. அம்மா அணியைச் சேர்ந்த டி.டி.வி.தினகரன் திருச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.

அதில் தெரிவித்துள்ளதாவது, “ஜெயலலிதா மறைவுக்கு பின் முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால்தான் அவரை முதல்வர் பதவியில் இருந்து மாற்றினோம். தனக்கு பதவி கிடைக்கவில்லை என்றதால், அவர் என்ன செய்தார் என்பது மக்களுக்கு தெரியும். புதுக்கோட்டையில் நடந்த அரசு விழாவில் கருவாடு மீனாகாது என வசனம் பேசி இருக்கிறார். ஜெயலலிதா மரணத்தை வைத்து அரசியல் நடத்துகிறார். அவரை ஜெயலலிதாவின் ஆன்மாவும் மன்னிக்காது. தொண்டர்களும் மன்னிக்க மாட்டார்கள். தமிழகத்தில் டெங்கு தடுக்க முன்னேற்பாடு நடவடிக்கைகளை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோர் எடுக்கவில்லை.

அதனால்தான் தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. எடப்பாடியும், பன்னீர்செல்வமும் பகல் கனவு கண்டு வருகிறார்கள். வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். மக்கள் நலனுக்கான அரசை கொண்டு வருவோம். அது ஜெயலலிதா அரசாக இருக்கும். பொது செயலாளரும் (சசிகலா), கட்சியின் ஆட்சி மன்ற குழுவும் விரும்பினால் மீண்டும் ஆர்.கே.நகரில் போட்டியிட தயாராக உள்ளேன். பிரிந்தவர்கள் எல்லோரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தம்பித்துரை கூறியுள்ளார். இது வரவேற்கத்தக்கது. தாய் கழகம் என்பது சசிகலா தலைமையிலான அணி தான். எனவே இதில் அனைவரும் சேர வேண்டும். ஆர்.கே. நகர் மற்றும் சட்டமன்ற, பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடந்தால், உண்மையான அதிமுகவை மக்கள் அடையாளம் காட்டுவார்கள்.” என்றுள்ளார்.

0 Responses to ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடத் தயார்: டி.டி.வி.தினகரன்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.