Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுள்ள அவரது மணி மண்டபத்தை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சற்றுமுன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைத்தார்.

இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் அமைச்சர்கள், தமிழ் திரையுலகினர், நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர் உள்ளிட்ட ஏராளமானோர் சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்றனர். விழா தொடக்கத்தில் மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் ஜெயக்குமார், ரஜினியையும், கமலையும் மேடைக்கு அழைத்தார்.

விழாவில் பேசிய நடிகர் பிரபு, ‘சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவு நிறைவேறியுள்ளது. சிவாஜி கணேசன் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். கருணாநிதி திறந்துவைத்த சிவாஜி சிலை மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. எனவே சிவாஜியின் பலிபீடத்தில் கலைஞர் கருணாநிதியின் பெயரை ஒரு ஓரத்திலாவது வையுங்கள் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.

0 Responses to ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் மணி மண்டபம்; ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...