Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐரோப்பாவில் சுற்றிவர நாடுகளால் மூடப்பட்ட (Land locked) நாடான சுவிட்சர்லாந்து யுத்தங்களின் பாதிப்பு அற்ற நீண்ட வரலாற்றைக் கொண்ட நாடு மட்டுமன்றி இயற்கை அனர்த்தங்களும் அதிகளவு வீதத்தில் ஏற்படாத நாடு எனவும் நீங்கள் கருதலாம். சுவிட்சர்லாந்துக்கு மிக அண்மையில் உள்ள கடல் 400 Km தொலைவில் அமைந்துள்ளது.

ஆனாலும் எமக்கும் சுனாமி தாக்கும் அபாயம் அறவே இல்லை எனக் கருத முடியாது என்கின்றனர் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள். இதற்குப் புவியியல் ரீதியிலான முக்கிய காரணமாக மேற்கு ஐரோப்பாவில் உள்ள மிகப் பெரிய ஏரிகளில் சில சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ளமை கூறப்படுகின்றது. ஆனால் சுனாமியால் பாரிய அனர்த்தம் ஏற்பட்டதாக அண்மைய வரலாற்றில் இல்லை. 1601 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் 8 பேரைப் பலி வாங்கி இருந்தமையே இறுதியான பதிவாகும். ஆனாலும் எந்தவொரு பிரச்சினைக்கும் முன்கூட்டியே யோசிக்கும் திறனுடைய சுவிட்சர்லாந்து அரசு தமது நாட்டைத் தாக்கக் கூடிய அடுத்த சுனாமி எப்போது ஏற்படும் என்ற சாத்தியத்தை அறிவதற்காக 1.5 மில்லியன் யூரோ பெறுமதியான ஒரு ஆய்வை மேற்கொண்டு வருகின்றது என்றால் நீங்கள் வியப்படைவீர்கள்.

1601 ஆம் ஆண்டு உண்டெர்வால்டென் பகுதிழில் 5.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக லுசேர்ன் ஏரியில் 4 மீட்டர் உயரத்துக்கு எழும்பிய அலைகள் காரணமாக 8 பேர் பலியாகி இருந்தனர். இதுதவிர வலெயிஸில் 563 ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு ஒன்றின் காரணமாக ஜெனீவா ஏரியில் சுனாமி ஏற்பட்டு அதில் சிலர் பலியாகி இருந்ததாகவும் பதிவு உள்ளது. நிலநடுக்கம் என்று பார்த்தால் 1946 இல் வலெயிஸின் சியெர்ரே பகுதியில் ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் அதிகபட்சமாக இருந்தது. மேலும் ஒவ்வொரு 50 தொடக்கம் 150 வருடங்களுக்கு ஒருமுறை சராசரியாக பாரியளவு நிலநடுக்கங்கள் சுவிட்சர்லாந்தைத் தாக்கும் அபாயம் உள்ளது எனவும் தற்போது கணிக்கப் பட்டுள்ளது.

தற்போது இந்த நிலநடுக்க ஆய்வில் பேர்ன் பல்கலைக் கழகம், பிரெமெனின் கடல் சூழலியல் ஆய்வு மையம் மற்றும் சூரிச் ETH பல்கலைக் கழகம் மற்றும் சுவிட்சர்லாந்தின் புவியியல் மற்றும் சூழலியல் சேவை மையங்கள் என்பன இணைந்து செயற்படுவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to சுவிட்சர்லாந்தினை சுனாமி தாக்கும் அபாயம் உள்ளதா? : விஞ்ஞானிகள் கூறுவது என்ன?

Post a Comment

Followers