தாஜ்மஹால் சுற்றுலாத்தள பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யானாத், தீபாவளியை அயோத்தியாவில் கொண்டாடினார். அயோத்தியாவை ராம் ராஜ்ஜியமாக மாற்றப் போவதாகவும் அறிவித்துள்ளார். இதற்கென பிரத்தியேக நிதித் தொகையும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏழ்மை இல்லாத, துயரம் இல்லாத, பாகுபாடு இல்லாத, அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி உடைய நகரமாக அயோத்தியை மாற்றுவதையே தான் ராம் ராஜ்ஜியமாக மாற்றப் போவதாக கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அயோத்திக்கு அவர் வருகையை முன்னிட்டு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 Responses to ராம் இராஜ்ஜியமாக அயோத்தியை மாற்றப் போவதாக உத்தரபிரதேச முதல்வர் சூளுரை!