Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“நான், டி.டி.வி.தினகரனின் ‘ஸ்லீப்பர் செல்’ இல்லை. மனசாட்டிப்படியே வி.கே.சசிகலா பற்றி பேசினேன்.” என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

திருச்சியில் அரசு விழாவில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசியதாவது, “மதுரையில் நேற்று மருத்துவ முகாமைத் திறந்துவைத்த பின் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலாவின் உதவியோடு அ.தி.மு.க மீண்டும் ஆட்சி அமைத்தது. நாங்கள் நன்றி மறக்க மாட்டோம். ஆனால், அமைச்சர் என்ற பொறுப்பில் இருப்பதால் ஆட்சி தொடர என் விருப்பு வெறுப்புகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு பணியாற்றுகிறேன்.” என்று பேசினார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ, சசிகலா பற்றி திடீரென கனிவாகப் பேசியதைத் தொடர்ந்து மனசாட்சி உள்ளவர் செல்லூர் ராஜூ என்று டி.டி.வி.தினகரன் பாராட்டிப் பேசினார். இதனால் தினகரன் அடிக்கடி கூறும் ஸ்லீப்பர் செல், செல்லூர் ராஜூதான் என்று அ.தி.மு.க வட்டாரங்கள் கூறிவருகின்றன. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செல்லூர் ராஜூ, தான் ஸ்லீப்பர் செல் கிடையாது என்று கூறினார். இந்த ஆட்சி அமைய சசிகலா தான் காரணம் என்பதை யாரும் மறக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதா கனவுப்படி நூறு ஆண்டுகள் கட்சியையும் ஆட்சியையும் நடத்துவதே தங்கள் நோக்கம் என்று கண்ணீர்மல்க செல்லூர் ராஜூ கூறினார். எனவே ஆட்சிக்கு கலங்கம் ஏற்படும் வகையில் நடந்துகொள்ள மாட்டேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

0 Responses to நான், டி.டி.வி.தினகரனின் ‘ஸ்லீப்பர் செல்’ இல்லை: செல்லூர் ராஜூ

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...