Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுக் கூட்டம் கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்துக்கு ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், வரவு- செலவுத் திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுவதற்கு சிவசக்தி ஆனந்தனுக்கு, இரா.சம்பந்தன் அனுமதி மறுத்த நிலையில், கூட்டமைப்புக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப்.க்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to பாராளுமன்றக்குழுக் கூட்டம் இன்று; சிவசக்தி ஆனந்தனுக்கும் அழைப்பு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.