Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தாலும், மூன்று மாதங்கள் கடந்துள்ள போதிலும் மனங்கள் இணைந்தனவா? என்பது அதிமுக அடிமட்டத் தொண்டர்களின் கேள்வி என்று அதிமுக மக்களை உறுப்பினரான மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

மைத்ரேயன், நேற்று பேஸ்புக் பக்கத்தில், “இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் இணைந்து இன்றுடன் 3 மாதம் முடிந்து, 4வது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?” என்று கேள்வி எழுப்பி தனது விரக்தியை காட்டியுள்ளார்.

இது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு மைத்ரேயனின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் முகநூலில் அதிமுக இரு அணிகள் குறித்து தாம் கூறிய கருத்தில் மாற்றம் இல்லை என்று மைத்ரேயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பெரும்பாலான அடிமட்டத் தொண்டர்களின் உணர்வைத்தான் நான் எதிரொலித்துள்ளேன் எனவும் கூறியுள்ளார்.

0 Responses to பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிகள் இணைவில் மனங்கள் இணைந்தனவா? என்பது அதிமுக தொண்டவர்களின் கேள்வி: மைத்ரேயன்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.