Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி பள்ளிகளில் அரசு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

“நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் மட்டுமே அரசிய பண்ணுகிறார். தமிழகம் பல்வேறு புயல்களில் பாதிக்கப்பட்டிருக்கிறது. அப்பொழுதெல்லாம் கமல்ஹாசன் எங்கே சென்றார்? அவரால் ட்விட்டரில் மட்டுமே அரசியல் பண்ண முடியும். அது பயனளிக்காது.

அரசைக் குறை கூறுகிறார் மு.க.ஸ்டாலின். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவரது கடமையைச் செய்கிறார். வெள்ளத் தடுப்பு பணிகளில் தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது.  வெள்ள பாதிப்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாகச் செய்கிறது என்று எதிர்க்கட்சியினர் கூறுவார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது.

டிசம்பரில் ஆட்சி முடிந்துவிடும் என்று சொல்லி வருகிறார் டிடிவி தினகரன். வருடா வருடம் டிசம்பர் வரும். ஆட்சியும் சிறப்பாக தொடரும்.  கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலும் தமிழக மக்களை நேரில் சந்தித்து, மக்கள் குறைகளைத் தீர்க்கும் முதல்வரை நாம் பெற்றிருக்கிறோம்.” என்றார் கூலாக.

0 Responses to ’’அப்போது கமல்ஹாசன் எங்கே சென்றார்?’’ -அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அதிரடி!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.