Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமது கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இதற்கமைய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமது கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பிரதான கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்பட முடியாமையால் இம்முறை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக, ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி: தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவிப்பு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.