Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கூட்டத்தை ஈ.பி.ஆர்.எல்.எப். புறக்கணித்துள்ளது.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கூட்டம் யாழ்ப்பாணத்திலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. தமிழரசுக் கட்சி, புளோட், ரெலோ ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த போதும், ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொண்டிருக்கவில்லை.

ஈ.பி.ஆர்.எல்.எப், கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட உள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார். அதனாலேயே, அந்தக் கட்சி கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பை தவிர்த்திருக்கலாம் என்று தெரிகின்றது.

0 Responses to த.தே.கூ. பங்காளிக் கட்சிகள் கூட்டத்தை ஈ.பி.ஆர்.எல்.எப் புறக்கணிப்பு; உள்ளூராட்சித் தேர்தலில் தனிப் பயணம்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.