Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திக்கெட்டும் முழங்கும் செந்தமிழ் குரலின் தீந்தமிழ் ஒலி..

ரியூப் தமிழ் நிறுவனத்தின் விளம்பர சஞ்சிகை இப்போது யாழ். மண்ணில் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது.

அந்தவகையில் அதன் அடுத்த கட்டமாக இன்று ரியூப்தமிழ் எப்.எம் யாழ். மண்ணில் இருந்து பரீட்சார்த்த ஒலிபரப்பாக இன்று ஆரம்பித்துள்ளது.

”பாட்டு வரும்… பாட்டு வரும்.. – அதை
கேட்டுக் கொண்டிருந்தால் பாட்டுவரும்..”

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் இருந்து இன்று முதல் 24 மணி நேரமும் முழங்கிக் கொண்டிருக்கிறது.. ரியூப்தமிழ் எப்.எம். www.tubetamil.fm

”இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் – இதுதான்
எங்கள் உலகம் எங்கள் உலகம்..” என்று இரவில் மட்டும் பணியாற்றாது..

”இரவு வரும் பகலும் வரும்
உலகம் ஒன்றுதான்..” என்று இருபத்தி நான்கு மணி நேரமும் சுழல்கிறது.. உலகைச் சுற்றி..
இரவு பகலாக ஒலிபரப்பாளர்கள் இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

”துணிந்து நில்.. தொடர்ந்து செல்..
தோல்வி கிடையாது தம்பி..
உள்ளதைச் சொல் நல்லதைச் செய்..
கடவுள் இருப்பதை நம்பி..”

இப்போது நீங்கள் ரியூப் தமிழ் எப்.எம் என்ற முகவரியை இணையத்தில் அழுத்தினால் போதுமே.. உங்கள் வீட்டை ஒலி வெள்ளத்தில் மூழ்கடிக்கும்.. ரியூப் தமிழ் எப்.எம்.

யாழ்ப்பாணத்தை மட்டுமல்ல அகில இலங்கையையும் கண் முன் தரிசனமாக்க தயாராகிவிட்டது ரியூப் தமிழ் எப்.எம்.

யாழில் இருந்து மட்டுமா இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் சிறப்பு ஒலிபரப்பாளர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்..

உலகத்தில் தேடக்கிடைக்காத உன்னதங்களை உள்ளத்தால் அள்ளித்தர துடிக்கிறது ரியூப் தமிழ் எப்.எம்.

”அள்ளித்தந்த வானம்
அன்னையல்லவா..
சொல்லித்தந்த பூமி
தந்தையல்லவா..?
நாளெல்லாம் நாளெல்லாம்
ஆனந்தம்.. இனி
வாழ்வெல்லாம் வாழ்வெல்லாம்
ஆனந்தம்..”

இது மட்டுமா இல்லையே..?

ஒலியை துல்லியமாக தருவதற்காக இரண்டு தனி அலைவரிசைகளாக வரவிருக்கிறது, ஒன்று ஐரோப்பா – அமெரிக்காவிற்கும் வேகம் கூடிய இணையங்களுக்குமானது..

இன்னொன்று வேகம் குறைந்த கணினிகளுக்குமாக இரு தளங்களில் வரப்போவதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ். மண்ணில் இருந்து 24 மணி நேரமும் இருபது வரையான பணியாளர்களால் முன்னெடுக்கப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

ஒரு காலத்தில் மிதிவண்டியை சுழற்றி அதன் டைனமோவில் வானொலி கேட்ட யாழ். மண்ணில் இருந்து திரியைக் கொழுத்தி வீசுகிறது தீந்தமிழ்..

கொழும்பிலிருந்தும் கேட்க முடியாத துல்லியத்தோடும் ஓர் எப்.எம்மை தரமுடியுமா என்பது ஒரு சவாலாக இருந்தது உண்மை.

”சவாலே சமாளி
தனித்து நின்று துணிச்சலோட
சமாளி..!”

ஆனால் இன்று நம் தாயகக் கலைஞர்கள் அதை செய்யத் தொடங்கிவிட்டார்கள்..

பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நான் அதை பாடவில்லை.. ஆம் யாழில் இருந்து பாடுகிறது..!

”பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களை காண வந்தால்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆடவந்தாள்..” ரியூப் தமிழின் குரல் பாடாத பாட்டெல்லாம் பாடுகிறது..

கேட்டுத்தான் பாருங்களேன்..

”பூக்களே சற்று ஓய்வெடுங்கள் – அவள்
வந்துவிட்டாள் – அவள்
வந்துவிட்டாள்..”

” யார் அவள்..?”

இனியும் என்ன சந்தேகம்..?

அவள்தான் ரியூப் தமிழ் எப்.எம்..!!!

www.tubetamil.fm



0 Responses to யாழ்ப்பாணத்தில் இருந்து ரியூப் தமிழ் பரீட்சார்த்த ஒலிபரப்பு ஆரம்பித்தது.. www.tubetamil.fm

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.