‘சுனாமி’ ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களில் 13வது நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம், வடமராட்சிக் கிழக்கு, உடுத்துறையிலுள்ள சுனாமி பொது நினைவாலயத்தில் இன்று காலை 09.00 மணியளவில் ஒன்றுகூடிய நூறுக்கணக்கான மக்கள், தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இலங்கையில் சுமார் 38,000 உயிர்களை சுனாமி ஆழிப்பேரவை காவு கொண்டது. 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி காலை 09.00- 09.30 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கைப் போன்ற பல ஆசிய நாடுகள் சுனாமியின் கோரப்பிடிக்குள் சிக்கி பல இலட்சம் உயிர்களை இழந்தன.

0 Responses to ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் 13வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!