இலங்கையிலிருந்து செயற்படும் 80 வீதமான பேஸ்புக் போலிக் கணக்குகளை இந்த ஆண்டுக்குள் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் கணினி அவசர தயார்நிலை ஒருங்கிணைப்பு மையத்தின் (CERT) முதன்மை தகவல்கள் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
“இந்த ஆண்டில் நவம்பர் வரை 3,400 போலி பேஸ்புக் கணக்குள் தொடர்பிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதில் பெரும்பாலான விடயங்கள் தொடர்பில் CERT நிறுவனத்தால் பேஸ்புக் நிறுவனத்திற்கு முறையிடப்பட்டுள்ளதோடு, ஏனைய முறைப்பாடுகள் உரிய முறைப்பாட்டாளர்களால், அவர்களது பெயரில் திறக்கப்பட்டுள்ள போலிக் கணக்குகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, குறித்த விடயம் தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் 80 வீதமான போலியான கணக்குகளை நீக்கும்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to 80 வீதமான பேஸ்புக் போலிக் கணக்குகளை நீக்க நடவடிக்கை!