Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லைத்தீவு நகரப் பகுதியில் பரவி வருகின்ற ஒருவகை காய்ச்சல் காரணமாக, கடந்த மூன்று வார காலப் பகுதியில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ள நிலையில், இது தொடர்பில், மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற ஆய்வுகள் குறித்தும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

சுகாதார, போசாக்கு மற்றும் தேசிய மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எழுதியுள்ள கடிமொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

டக்ளஸ் தேவானந்தா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, “வடக்கில் டெங்கு நோயாளர்களது அதிகரிப்பு தொடர்பிலும், மலேரியா நோய் பரப்புகின்ற நுளம்புகளின் பெருக்கம் தொடர்பிலும் நான் ஏற்கனவே சுகாதார அமைச்சின் அவதானத்திற்குக் கொண்டு வந்துள்ள நிலையில், தற்போது மேற்படி மர்மக் காய்ச்சல் முல்லைத்தீவு மாட்டத்தில் ஒன்பது உயிர்களை பலியெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

சுமார் மூன்று காலப் பகுதிக்குள் 9 பேர் உயிரிழந்தமையானது மிகவும் பாரதூரமான நிலைமையாகவே காணப்படுகின்றது. எனவே, இவ் விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

உள்ளூராட்சி சபைகளின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகள் இன்மையும், மாகாண சபையின் வினைத்திறன் இன்மையும் காரணமாக வடக்கு மாகாணத்தில் பல்வேறு நோய்கள் பரவுகின்ற நிலைமையினையே காணக்கூடியதாக இருக்கின்ற சூழலில், வடக்கின் சுகாதார நிலைமை குறித்து மத்திய அரசும் அதிக அவதானமெடுக்க வேண்டியத் தேவை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், இவ் விடயம் தொடர்பில் உடனடி அவதானமெடுத்து, மேற்படி நோயின் காரணம் கண்டறியப்படவும், இந்நோய் மேலும் பரவாமல் தடுப்பதற்கும், நோய்க்கான மருந்து வகைகள் பற்றாக்குறை அல்லது தேவைகள் இருப்பின் அவற்றை விரைந்து வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to முல்லைத்தீவில் பரவும் காய்ச்சலால் 9 பேர் உயிரிழப்பு; நடவடிக்கை எடுக்கக் கோரி ராஜிதவுக்கு டக்ளஸ் கடிதம்!

Post a Comment

Followers